மண் கலவை
மண் விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. சாதாரண மண், அதிக எடை கொண்டது.
எனவே கோகோ பீட் என்று சொல்லக்கூடிய தேங்காய்நாரில் தயாரிக்கப்படும் ஒரு வகையான
மண்ணை கொண்டு செடிகளை பயிர் செய்வதே கட்டிடத்துக்கு பாதுகாப்பானது. இதன் எடையும்
குறைவு. தண்ணீரையும் நீண்ட நேரம் தேக்கி வைத்துக் கொள்ளும். இதனுடன், இயற்கை முறையில்
தயாரிக்கப்பட்ட மண்புழு உரத்தையும், இயற்கையான பூச்சி கொல்லி மருத்துகளையும் பயன்படுத்த வேண்டும்.
நான்கில் ஒரு பங்கு மண்ணாகவும், ஒரு பங்கு தேங்காய்
நார் துகள்களையும்,ஒரு பங்கு மக்கிய உரம், ஒரு பங்கு ஆற்று மணல், 1:1:1:1 என்ற
முறையில் பயன்படுத்துவது நல்லது..
Coir
Pith block ஐ உடைத்து நீரில் ஒரு இரண்டு நிமிடம் ஊற
வைத்தால் உதிர்ந்து விடுகிறது. தேங்காய் நார் தயாரிக்க பொதுவாய் Saline Water ல் ஊற வைக்க படுகிறது. இதனால் இந்த பவுடரில் கொஞ்சம் உப்பு தன்மையும், அதிகமாக Electrical Conductivity யும் இருக்கும். அப்படி இருந்தால் அது செடி வளர ஆகாது. இதை EC Value கொண்டு ‘Low EC block’
‘High EC block’ என்று குறிப்பிடுகிறார்கள். மேலும்
இந்த பவுடரை Compress செய்யவும் கொஞ்சம் bonding
material பயன்படுவார்கள். இதை எல்லாம் நீக்க நாம் நீரில் இரண்டு அல்லது மூன்று
முறை ஊறவைத்து கொஞ்சம் கழுவி/அலசி எடுத்து
கொள்வது நல்லது. அப்போது தான் செடி நன்றாக வரும்.
இந்த பவுடர் வெறும்
ஊடகம் அவ்வளவு தான். அதில் செடிக்கு தேவையான எந்த கனிமங்களோ, சத்துகளோ கிடையாது.
நீரை பிடித்து கொள்ளவும், செடியின் வேர் எளிதாய் போகவும் ஒரு நல்ல மீடியா. அவ்வளவு தான்.






o
செடி வகைகளுக்கு 1 அடி ஆழத்திற்கு மேல்
மண் கலவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
o
கொடி வகைகளுக்கு 2 அடிக்கு
மேலாக இருக்கும்படி பைகளில் மண் கலவையை எடுத்துக்கொள்ளவும்.

காத்திருப்பு



விதைப்பு முறை
நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை
மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.
கீரை வகைகளின் விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தேக்கரண்டி
விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.
பிறகு அதைச் செய்தித்தாளால் மூடிவிட வேண்டும். அதன் மேல் பூவாளியைக் கொண்டு நீர்
ஊற்ற வேண்டும். விதைகள் நன்கு முளைத்த பிறகு தாளை எடுத்துவிட வேண்டும்.
நாற்றுவிட்டு நடவு செய்யும் முறை:நாற்றுவிட்டு நடவு செய்து பயிரிடும்
காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றைக் குழித்தட்டில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம்
விதைக்க வேண்டும். நாற்றின் வயது 30-35 நாட்கள் ஆன பிறகு செடிகளை வளர்ப்பதற்கான பையில் நடவேண்டும். அதுவரை
பையில் கீரை விதைகளை விதைத்துப் பயன் பெறலாம்.
குழித்தட்டு




செடிகளை
வளர்க்கும் காலம்
காய்கறிச் செடிகளை எல்லாக் காலங்களிலும் பயிர் செய்யலாம். ஆனால், ஏப்ரல் மற்றும் மே
மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்னொரு விஷயம். மாடியில் அல்லது பால்கனியில் தோட்டம் அமைக்க
நினைத்தால், எல்லா காய்களையும் ஒரேடியாக போட்டு பயிர் செய்ய வேண்டாம். முதலில்
கீரை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சின்ன தொட்டியில் வைத்து பயிர் செய்யலாம். இவை
எல்லா காலத்திலும் விளையும். அடுத்து வெண்டைக்காய். பிறகு தக்காளி, கத்தரிக்காய் என
ஒன்வொன்றாக பயிர் செய்வதே நல்லது. உங்களால் முடியும் என்றால் அணைத்து காய்கறிகளையும் பயிர்யிட
இறங்கலாம்.
இதற்கு எவ்வளவு
நேரம் தேவைப்படும்?
புதிதாக தொடங்க ஒரு வாரம் முதல்
பத்து நாட்கள் தேவை படலாம். செடிகள் நட்டு வளர ஆரம்பிக்க ஒரு மாதம் பிடிக்கும.நீங்களே வளர்த்த தாவரங்கள் என்பதால், அதனால் உண்டாகும் பலன்கள் உங்களுக்கு பரமதிருப்தியைத் தருகிறது.
உற்சாகமாக
ஈடுபடுங்கள்...
சந்தோசமான வீட்டுத் தோட்டத்துக்கு என் வாழ்த்துக்கள்...
மேலும்
வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்....
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.