அந்திமல்லி:
மாலையில் பூக்கும் பூ.அதனால் அந்தி மல்லி என்று பெயர்பெற்றது.இந்த
செடியின் பூக்கள் பார்க்க அழகாக இருக்கும்.சிறு வாசனை கொண்டது.
இது பிங்க், ஆரஞ்சு, மஞ்சள் , வெள்ளை என்று பல்வேறு வண்ணங்களில் பூக்கள் காணப்படும்....
மாடி தோட்டத்தில் வளர்க்க அருமையான செடி. வரிசையாக மஞ்சள் பிங்க்
ஆரஞ்சு என்று நட்டு வளர்த்தல் அழகாக மாறிவிடும் உங்கள் தோட்டம்.நல்ல ஒருவித வாசனை
கொடுக்க கூடிய பூ இது. அடர்ந்த வண்ணம் கொண்ட பூக்களை கொண்டது.
நடும் முறை:
இந்த செடி விதை போட்டு முளைக்க கூடியது. இதன் விதை மிளகு போன்று தோற்றம்
உடையது. மிளகை விட கருமையாகவும்,சிறிது பெரிய அளவில் இருக்கும்.
அந்த விதைகளை நேரடியாகவே தொட்டிகளில் அல்லது தோட்டத்தில் மண்ணில்
நடவேண்டியது. நாற்று விட வேண்டும் என்று அவசியம் இல்லை. (முன்பே கூறியிருப்பேன்
கடுகை விட பெரிய விதைகள் நேரடியாக விதைக்கலாம் என்று)
ஒரு தொட்டிக்கு ஒரு விதை போதும். இந்த செடி நன்கு கிளை விரித்து படரக்
கூடியது.ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச வேண்டும். வெயில் தாங்கி
வளரக்கூடியது.
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.