முதல் கட்டம்
மாடியில் காய்கறிகளைப்
பயிரிடுவதற்கான வழிமுறைகள்:
வீட்டுக் காய்கறித் தோட்டத்தை உருவாக்குவதில்
பல் வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
இடம் தேர்வு செய்தல்
மாடிப் பகுதியில் அதிகச் சூரியஒளி கிடைக்கும் இடங்கள் மற்றும்
அதிகப்படி நீர் எளிதாக வெளியேறுவதற்கான வடிகால் வசதி உள்ள இடங்களைத் தேர்வு செய்ய
வேண்டும்.. பின்னர் எந்த இடத்தில எந்த செடி வைக்கலாம்னு ஒரு map போடுங்க. உங்க தோட்டம் சூப்பர்
ஆஹா இருக்கும்.
நீர்க்கசிவைத் தடுத்தல்:
மாடியில் பைகள்
வைக்கும் போது துளைகளின் வழியே தண்ணீர் வெளியேறும் போது மாடியில் தேங்கக்கூடாது.
சட்டமிடப்பட்ட
மரப்பலகைகளில் பைகளை வைத்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேறி விடும்.அவசியம் வாட்டர்
ப்ரூப் பெயிண்ட் அடிக்க வேண்டும்.இன்னொரு விஷயம். செடிகளை வாங்கும்போது பிளாஸ்டிக் கவர்களில் போட்டுத்தான் தருவார்கள். அந்த கவருடன் அப்படியே வளர்க்கக் கூடாது. மாடியின் தரைப் பகுதியை அது சேதப்படுத்தி விடும். தொட்டிதான் என்றுமே பெஸ்ட்.
செடிகளுக்கு தண்ணீர் விடும் போது அது தொட்டிக்கு கீழேகொஞ்சம் தங்கும். அப்படி தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் தரையில் விரிசல் ஏற்படும்.
இந்த படத்தில் உள்ளவாறு அமைதல் வேண்டும். மாடி தரையில் paint அடித்து இருகாங்க பாருங்க நண்பர்களே.
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.