காய்கறிகள்


வீட்டில் தோட்டம் அமைக்கும் பாங்கு அதிகரித்து வருகிறது. வீட்டின் சுற்றுப்புற பகுதியில் இடவசதி இல்லாதவர்கள் மாடியில் தோட்டம் அமைக்கிறார்கள். வீட்டு  சமையலுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்வதே தோட்டம் அமைப்பதன் முதன்மை நோக்கமாக இருக்கும். அவை ரசாயன பூச்சிக்கொல்லிகள் வாசம் இல்லாத காய்கறிகளாக கிடைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு வலிமை சேர்ப்பதாக கருதுகிறார்கள்.

உங்கள் தோட்டத்தை நீங்களே வடிவமைக்கலாம். ஒரு சிறிய இடத்தில் நாற்றங்கால் எனக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த நாற்றங் காலில்தான் வெண்டை, மிளகாய், கத்திரி, தக்காளி எல்லாம் தன் முதல் 15 to 30  நாட்களைக் கழிக்கப்போகின்றன. இதுதான் உங்கள் "காய்கறிப் பயிரின் குழந்தைப் பருவம்".

நாற்றங்காலில் விதைகள் முளைத்து இலைகள் பரப்பி ஒரு 10 செ. மீ. வளர்ந்த பின் சிறிய இடைவெளி விட்டுப் பிடுங்கி நட்டுவிடலாம். ஒவ்வொரு காய்கறிக்கும் நடும் இடைவெளி வேறுபடும். வீட்டுத் தோட்டம் என்பதால் இடைவெளியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

வீட்டு தோட்டத்திலும்,மாடியிலும் எளிமையான முறையல் வளர்க்க கூடிய காய்கறி வகைகள் கீழே கொடுக்க பட்டுள்ளது.லிங்க் கிளிக் செய்து பார்க்கவும் நண்பர்களே.

கத்தரி               
தக்காளி           
வெண்டை        
பீன்ஸ்                 
வெ .முள்ளங்கி
சி. முள்ளங்கி  
வெங்காயம்    
கொடி அவரை 
பாகல்       
பீர்க்கன்   
பூசனிக்காய்
தர்பூசணி
நீட்டசுரை  
குண்டு சுரை
வெள்ளரி
பட்டை அவரை
கொடி காராமணி
சோளம்

மரவள்ளி

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.