தோட்டம் பொருட்கள்

தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள்: 

இங்கு நான் பழைய மற்றும் புதிய பொருட்கள் பட்டியளிடுகிறேன், உங்களுக்கு எது  எளிமையாக இருக்கிறதோ அத எடுத்துக்குங்க  நண்பர்களே.
மண்                     மண் தொட்டி
உயிர் உரம்              பெயிண்ட் வாளி
தேங்காய் நார்            தண்ணீர் பாட்டில்
வாழை மட்டை,          பிளாஸ்டிக் வாளி
வேப்ப எண்ணெய்        பிளாஸ்டிக் குவளை
தெர்மாகோல் பெட்டி      ஊதா வண்ண கெமிக்கல் கேன்
பிளாடிக் கேன்            20லி தண்ணி கேன்
 பிளாஸ்டிக் தட்டு          ட்ரே க்கள்

உபயோக படுத்தும் முறை: 
வீட்டிற்கு வெளியில் உள்ள மண் தோட்டம் என்றால்,பெரிதாக ஏதும் தேவை இல்லை நண்பர்களே.மாடி தோட்டத்திற்கு சிறிது கவனம் தேவை. நீங்கள் கவலை படாதிர்கள், இந்த தளத்தில் சிறந்த எளிமையான முறையில், எப்படி தோட்டம் அமைப்பது என்று இருக்கிறது.
     
மண்,மணல்

உங்கள் பகுதியில் எந்த மண் கிடைகுறதோ அத எடுத்துக்குங்க நண்பர்களே. நீங்க எவ்ளோ செடி வைக்கலாம் என்று தோணுதோ அவளோவு. ஒரு செடி க்கு ஒருவாளிக்கு கால் பங்கு அளவுதான் இங்கு..அதிலும் அந்த மண்ணுக்கு சமமாகமணலும் கலக்கலாம், ஏன் என்றால் வெறும் மண், வேர் பகுதியை இருக்கி  கட்டியாக்கி விடும்
உயிர் உரம்

காய்ந்த வேப்பம் இலை, நன்கு மக்கிய மாட்டு சாணி உரம், மண்புழு உரம், இவைகளை உயிர் உரம் என்று கூறலாம்.இவை அனைத்தும் மண்ணிற்கு நல்ல உரமாக இருக்கும்.இவையும் தேவை அளவு எடுத்து கொள்ளவும்.


தேங்காய் நார் 
மாடி தோட்டத்தில் மிக முக்கியமாய் தேங்காய் நார் தூள் பயன்படுத்த வேண்டும்( Coir Pith / Coco Peat). தேங்காய் நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழில்சாலைகளில், தேங்காய் நாரில் இருந்து பவுடர் போல உதிர்ந்து விழும் Saw Dustபோன்ற பொருள் தான் இந்த Coir Pith. நாம் ஒரு தேங்காய் மட்டையை எடுத்து லேசாய் உதிர்த்து பார்த்தாலே தூசி போல கொட்டும். இந்த பவுடர் இப்போது நிறைய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அங்கே இதை மண்ணிற்கு பதிலாக பயிர் வளர்க்க பயன்படுத்துகிறார்கள். இங்கே பொள்ளாச்சி பக்கத்தில் நிறைய தொழில்சாலைகள் இருக்கின்றன. இந்த பவுடரை Compress செய்து ஒரு கிலோ, ஐந்து கிலோ கேக் வடிவில் கிடைக்கிறது
வேப்ப எண்ணெய்,
மாடி தோட்டத்தில் வேர்களில் எறும்பு வரும். இதற்க்கு  வேப்பம் பிண்ணாக்கை பொடி போன்று செய்தது கொள்ளவும்,அல்லது வேப்பம் எண்ணெய் ஒரு ஒரு ஸ்பூன் அளவு மண்லில் கலந்து செடி வைக்கலாம்.வேப்பம் எண்ணெய் கடைகளில் சுலபமாக கிடைக்கும் 100ml பாக்கெட் 20 rs தான் வரும்.
வாழை மட்டை,
இங்கு எதுக்கு வாழை மட்டை என்று கேட்கிறிங்களா?
இதோ அதற்கான பதில், மண் மேலே மூடி வைக்கத்தான். மாடியில் செடி வைக்கும் போது,மண்ணில் வேகமாக தண்ணீர் வற்றி விடும். அதனால்  பச்சை வாழை மட்டை சிறிது சிறிதாக வெட்டி மூடி வைக்கலாம்.

பிண்ணாக்கு
     கடலை, தேங்காய், எள்ளு பிண்ணாக்கு, இதில் எது இதில் எது கிடைக்கிறதோ அத எடுத்துக்குங்க நண்பர்களே. இவை தூள் தூளாக்கி மண்ணில் கலந்தும் செடிகளுக்கு இடலாம். அல்லது இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

தொட்டி
என்ன விதமான தொட்டிகள் உபயோக படுத்தலாம்?

இந்த அளவுவடிவம்பொருள் என்று ஒன்றுமே கிடையாது. அதனால் பிளாஸ்டிக்,  மண்பானைஉலோகம்செராமிக் எந்த பொருளில் செய்திருந்தாலும் பிரச்சனை இல்லை.

நீங்கள் இயற்கையை பேணும் ஆவல் உடையவரா?

இன்னும் சிறப்பாக உபயோகபடுத்தி தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் (கோலாதண்ணீர்)

பெயிண்ட் வாளி, தெர்மாகோல் பெட்டி, தண்ணீர் பாட்டில், மண் தொட்டி, பிளாஸ்டிக் வாளி, பிளாஸ்டிக் குவளை, பிளாடிக் கேன், ட்ரே

சரிங்க அதலாம் இருக்குங்க. அத எப்படி பயன் படுத்துறதுனு தெரிலனு சொல்லறிங்கனு நினைக்குறேன்.அதுக்கும் டிப்ஸ் இதோ..

20லி தண்ணி கேன்,ஊதா வண்ண கெமிக்கல் கேன் க்கள் இவகளை தேவையான அளவு மட்டும் வெட்டி எடுத்து கொள்ளவும்.பின்னர் அடியில் சிறிது ஒரு துளை போட்டுக் கொள்ள வேண்டும்.இது அதிக படியான தண்ணீர் வெளியேறிவிடும்.


பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் (பாதிக்கு மேல் கட் பண்ணியது). 

பேக்கரிகளில் கொடுக்கும் தெர்மோகோல் டப்பாக்கள.

நசுங்கிய வீட்டு பொருள்கள்,

மண் அல்லது சிமென்ட் தொட்டி

பிளாஸ்டிக் அரிசி சாக்

தேங்காய் ஓடுகள்,

பழைய பிளாஸ்டிக் வாளி (அடியில் சிறுதுளை போடவும்).இதற்கு மேலே உங்களின் கற்பனைக்கே!!


இவை மாட்டு சாணத்தால் செய்ய பட்ட தொட்டி மற்றும் உர கழிகள். இந்த வடிவத்திலும், கடைகளில் கிடைகிறது.      

20 லிட்டர் பழைய மினரல் வாட்டர் கேன் பழையபொருட்கள் கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கும்கிடைத்தால் அதையும் யூஸ் பண்ணிக்கலாம். (HORIZONTAL OR VERTICAL ஆக எப்படியும் கட் பண்ணிக்கலாம் உங்க விருப்பம்) 

பின்னர் படத்தில் உள்ளவாறு அதன் வரும்புகளில் ரப்பர் sleeveயை  சுற்றவும்.இவ்வாறு செய்தால் நம் கைகளுக்கு கிழிக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.இது உங்கள் விருப்பம் பொறுத்தே.

அடுத்து எதிர் எதிர் பக்கத்தில்,பக்கவாட்டில் இரண்டு இரண்டு சிறு துளைகளை இடவும்.அதில் சிறிது கயிறு கொண்டு, கேன் உள் பகுதியில் முடிச்சி போட்டு கொண்டு,கைப்பிடி போன்று அமைக்க வேண்டும். கேன்களை நகர்த்தி வைக்க உதவியாக இருக்கும்.

  மேல உள்ளது போன்று கேன்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் அரிசி சாக்கை வெளிப்புறமாக சுருட்டி அல்லது பாதி அளவாக மடித்து கொள்ளுங்கள்.

புதிதாக மண் தொட்டி வாங்கி வந்திருந்தால்,மண் தொட்டியை ஒருநாள் முழுவதும் நீர் தெளித்து ஊற வையுங்கள்.

ஓகே! இதில் எவையெல்லாம் கை வசம் இருக்கிறதோ அவற்றை எடுத்து கொள்ளுங்கள்.(எந்த பொருளையும் காய்கறி பயிரிட ஏற்றதாக மாற்றுவது உங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது...)

இதன் பிறகு செடிகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். ஓகே...இன்னைக்கு இவ்வளவு போதும்...

ட்ரே க்கள்

கீரைகள்,கொதமல்லி,புதினா, போன்றவை இந்த மாதிரி ட்ரே க்களில் வளர்த்தல் நன்கு தாரளமாக வளரும். சிறிது நேரம் மட்டும் வெயிலில் வைத்து விட்டு பிறகு நகர்த்த எளிமையாக இருக்கும்.


பிளாஸ்டிக் தட்டு
இந்த பிளாஸ்டிக் தட்டை,தொட்டி கீழே வைத்தால் வெளியாகும் தண்ணீர், இதில் தங்கி விடும்.உங்கள் மாடியை யும் விரிசல் இருந்து காப்பற்றி விடலாம்.
மாடி தோட்டத்திற்கு  grow bagஎன்று கடைகளில் விற்கப்படும்.அனால் அது அந்த அளவிற்கு சரியாக வராது நண்பர்களே.இவை எல்லாம் தயாரித்து கொள்ளுங்கள். அடுத்த கட்டத்திற்கு செல்வோம்.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்ககதை தொடரவும்..

துளிர்க்கும் ஒவ்வோர் இலையும், மொட்டவிழ்த்து மணம் பரப்பும் வண்ண மலர் ஒவ்வொன்றும் கண்களுக்கு விருந்தாக்குமே எழில் கொஞ்சும் இயற்கை காட்சி!

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.