ஒரு லிட்டர் நீரில் 100 கிராம் வேப்பம் புண்ணாக்கை முதல் நாள் இரவே ஊறவைத்துவிட
வேண்டும். இதை வாரம் ஒரு முறை செடிகளுக்கு தெளித்து வந்தால் போதும். எந்த விதமான
பூச்சியோ, நோயோ வராது. வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளிப்பதால் கள்ளிப் பூச்சி, இலை சுருட்டுப்புழு, வெட்டுக்கிளி, அசுவினி போன்றவற்றின்
பாதிப்பு இருக்காது. தொட்டியில் செடி வளர்க்க விரும்புபவர்கள், அதிகபட்சம் மூன்று
மாதத்துக்கு ஒரு முறை மண் மாற்றினால் தான் செடி வேகவேகமாக வளரும்.
செடிகளூக்கு
நீர் ஊற்றுவதற்கு காலை அல்லது மாலை நேரமே ஏற்றது. மதிய நேரத்தில் தண்ணீர்
ஊற்றினால் செடிகள் சுருண்டு விழுந்துவிடும். சில இடங்களில் செடிகளோடு விதவிதமான கூழாங்கற்களைப்
போட்டு வைத்திருப் பார்கள். இது அழகுக்காக மட்டுமல்ல. நீரை சேமிக்கவும் உதவுகிறது.
நீர் ஆவியாவதை தடுக்கும். மண் அரிப்பும் ஏற்படுவதில்லை.
வீட்டு தோட்டத்திலும்,மாடியிலும் எளிமையான முறையல் வளர்க்க கூடிய பூ
வகைகள் கீழே கொடுக்க பட்டுள்ளது.லிங்க் கிளிக் செய்து பார்க்கவும் நண்பர்களே.
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்ககதை
தொடரவும்..
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.