வீட்டுத்தோட்டத்தில் கவனிக்க வேண்டியவை:
பயிர்கள் முடிந்ததும்,காய்ந்து போன செடிகளின் தொட்டிகளை சேகரித்து
வைத்து, அதில் உள்ள செடிகளை பிடுங்கி வைத்து விட்டு, தொட்டிகளில் உள்ள மண்ணை
கொட்டி கட்டி இல்லாமல் உடைத்து ஒரு வாரம் காய வைக்கவும்.பிறகு புதிய மண் கலவை,
இயற்க்கை உரம் போன்றவற்றை அதில் கலந்து தொட்டிகளில் நிரப்பி செடிகளை நடவும்.
ஒவ்வொரு முறை நடும் போதும் தொட்டிகளை மாற்றி நடவேண்டும்.
மாடித் தோட்டம் போடுகிறேன் பேர்வழி என்று வீட்டை சேதப்படுத்தும்
வேலையைச் செய்துவிடக் கூடாது. தோட்டம் போடும் போது, வீடு சேதமடையாமல் கவனமாகச் செய்ய வேண்டும்.
தகுந்த இடைவெளியில் விதைகளை இட வேண்டும். அப்போதுதான் செடி நன்கு
வளரும்.
15 நாட்களுக்கு ஒரு முறை இயற்கை உரம் இட வேண்டும்.
மொட்டை மாடியில் அமைக்கும்
போது நீர் போகும் வழிகளை அடைக்காமல் அமைக்கவும்.
மாடித் தோட்டத்தில் (முருங்கையைத் தவிர) வேறு மரங்களை வளர்க்க
வேண்டாம். காற்றின் வேகத்தில் மரங்கள் சாயும் ஆபத்து உண்டு, கட்டிடத்துக்கும்
நல்லதல்ல.
கைப்பிடி சுவரோடு
ஒட்டி அமைத்து விடாமல் நான்கு புறமும் சென்று வர வழியோடு அமைக்கவும்.
குறைந்த இடத்தில்
அமைக்கிறோம் ,நிறைய பயிரிட வேண்டும் என அதிகம் செடிகளை நடாமல் போதுமான இடைவெளி
விடவும்.அடர்த்தி அதிகம் ஆனால் செடிகளிடையே ஊட்டச்சத்துக்கு போட்டி ஏற்பட்டு
எதுவுமே சரியாக வளராது.
நீர் தேங்காமலும், பானைகள் நீருடன்
திறந்து கிடக்காமலும் பார்த்துக்கொள்ளவும் ,இல்லை எனில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி டெங்கு
முதல் அனைத்தும் வரும்.
மேலும் சில பூச்சிகள்,வண்டுகள் உங்கள்
வீட்டுக்கு அழையா விருந்தாளியாகவும் வரலாம்
கட்டுப்படுத்த
வேப்பம் எண்ணையை நீரில் கலந்து(10%) கை தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
வீட்டு தோட்டத்தில்
எறும்புகள் அதிகம் படை எடுக்கும் அதுவும் விதைப்பின் போது ,அதைப்பார்த்துவிட்டு
துகளாக கிடைக்கும் எறும்பு மருந்தினை வாங்கி தூவக்கூடாது .ஏன் எனில் lindane 2-4-D என்ற ரசாயனமே எறும்பு மருந்து என விற்கப்படுகிறது. இது தடை
செய்யப்பட்ட ஒன்றாகும்.
எறும்பினை
கட்டுப்படுத்த கொஞ்சம் மேசை உப்பினை சுற்றிலும் கோடுபோல தூவிட்டாலே
போதும்.லச்சுமணன் ரேகை போல எறும்பு கோடு தாண்டாது.
தோட்டத்தில் பல்லி, சிலந்தி இருந்தால்
அப்புற படுத்த வேண்டாம் அவை பயிர்களின் நண்பனே இயற்கையாக பூச்சிகளை
கட்டுப்படுத்துபவை.
செடிகளூக்கு நீர்
ஊற்றுவதற்கு காலை அல்லது மாலை நேரமே ஏற்றது. மதிய நேரத்தில் தண்ணீர் ஊற்றினால்
செடிகள் சுருண்டு விழுந்துவிடும். சில இடங்களில் செடிகளோடு விதவிதமான கூழாங்கற்களைப்
போட்டு வைத்திருப் பார்கள். இது அழகுக்காக மட்டுமல்ல. நீரை சேமிக்கவும் உதவுகிறது.
நீர் ஆவியாவதை தடுக்கும். மண் அரிப்பும் ஏற்படுவதில்லை.
ஒரு லிட்டர் நீரில் 100 கிராம் வேப்பம் புண்ணாக்கை முதல் நாள் இரவே ஊறவைத்துவிட
வேண்டும். இதை வாரம் ஒரு முறை செடிகளுக்கு தெளித்து வந்தால் போதும். எந்த விதமான
பூச்சியோ, நோயோ வராது. வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளிப்பதால் கள்ளிப் பூச்சி, இலை சுருட்டுப்புழு, வெட்டுக்கிளி, அசுவினி போன்றவற்றின்
பாதிப்பு இருக்காது.
கவாத்து என்றால் என்ன?
கவாத்து செய்வது எப்படி?
கவாத்து
என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறையாகும். கவாத்து மரம் மற்றும்
செடிகளுக்கும் பொதுவான ஒன்று. கவாத்து செய்வதன் மூலம் புதிய கிளைகள் மற்றும் பூ
மொட்டுகளை துளிர்க்கச்செய்ய முடியும். இதனால் அதிக அளவில் மற்றும் புதிய கனிகள்
மற்றும் மலர்களை தருவிக்க முடியும்.
கவாத்து
செய்வதன் மூலம் தேவையற்ற கிளைகளை அப்புறபடுத்தி முழு ஊட்டச்சதுகளையும் வீணாகாமல்
பயிர்களுக்கு அளிக்கமுடிகிறது. அதோடு பயிர்கள் மற்றும் மரங்களிடையே நல்ல காற்றோட்ட
வசதி ஏற்படுகிறது. இதனால் மகரந்த சேர்க்கை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெற்று
மகசூல் அதிகரிக்கப்படுகிறது.
கவாத்து
செய்யப்பட்டு நீக்கப்பட்ட கிளைகள் மற்றும் இலைகளை நாம் மக்க வைத்து இயற்கை உரமாக
பயன் படுத்தலாம். ஏனெனில் ஒரு மரத்திற்கு அல்லது செடிக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து
மட்டுமே அது கிரகித்து அதன் பாகங்களில் வைத்திருக்கும். நாம் கவாத்து செய்யப்பட்ட
கிளை மற்றும் இலைகளை அப்புறபடுத்தினால் ஊட்டச்சத்துக்கள் வீணாகும் நிலை
ஏற்படும்.
கவாத்து செய்வது எப்படி?
கவாத்து
பூவெடுக்கும் தருணங்களில் பார்த்து செய்யவேண்டும். சில மரவகைகளை நாம் முழுவதும்
கவாத்து செய்யலாம். உதாரணத்துக்கு முருங்கை மரம். முருங்கை மரம் முழுவதும் கவாத்து
செய்யப்பட்டாலும் உடனடியாக நன்றாக வளர்ந்துவிடும்.ஆனால் சில வகை மரங்களில் நாம்
குறிப்பிட்ட அளவு மட்டுமே கவாத்து செய்யவேண்டும். இல்லையென்றால் மரம் பட்டுபோக
வாய்ப்பு உள்ளது. முதலில் தேவை இல்லாத கிளைகளை கவாத்து செய்யவேண்டும்.அதன் பிறகு
தேவையான அளவு கிளைகளை விட்டுவிட்டு நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்து
செய்ய வேண்டும்.
எப்போது கவாத்து செய்யகூடாது?
X
மரம் அல்லது செடி நோய் தாக்குதலுக்கு
உட்பட்டிருக்கும் போது செய்யகூடாது.
போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில்
செய்யகூடாது.
X
பருவ காலங்களில் பூ வைத்த பிறகு கவாத்து செய்யகூடாது.
X பூ
வைபதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு செய்யகூடாது.ஏனெனில் அப்படி செய்யும் போது அதிக
அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்துவிடும்.
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்ககதை தொடரவும்..
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்ககதை தொடரவும்..
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.