நாற்று விடும் தட்டு/ குழித்தட்டு:
காய்கறி
விதைகளின் நாற்றுகளைத் தயார் செய்யக் குழித்தட்டுக்களும் பயன் படுத்தப்படுவது
உண்டு. இதன் குழிகள் 2-3 அங்குலம் ஆழம் கொண்டவை.மேலும், வேர்கள் அழுகாமல் அதிகப்படியான நீர் வெளியேறுவதற்கு ஒவ்வொரு குழியிலும்
ஒரு துளை உள்ளது.
முதலில்
தென்னைநார் கழிவைக் கொண்டு இதை நிரப்ப வேண்டும்.ஒவ்வொரு குழியிலும் ஒரு விதை வீதம்
விதைத்த பிறகு நுண்ணுயிர் உரம் அல்லது மணலுடன் நுண்ணுயிர் உரம் சேர்த்த கலவையைக்
கொண்டு மூட வேண்டும். அதன்பிறகு, பிளாஸ்டிக் விரிப்பை எடுத்தவுடன்
சூரியஒளி படுமாறு குழித்தட்டை வெய்யிலில் வைக்க வேண்டும். பிற்பகலில் நிழல்
இருக்கக்கூடிய இடத்துக்கு மாற்ற வேண்டும். நாற்றுகள் அனைத்தும் ஒரு மாத காலத்தில்
நடுவதற்கு ஏற்றதாக மாறிவிடும்.
இதை கொண்டு எளிமையாக மரத்திற்கு மண் அணைக்கலாம், பெரிய பெரிய மண் திட்டுக்களை சரி
பண்ணலாம்.மண்வெட்டி தரை தோட்டத்திற்க்கு அதிகம் பயன் படும்.மாடி தோட்டத்திற்க்கு
அவளோவாக பயன் பெறாது.
இது சிறு மண்வெட்டி என்று கூறலாம்.இதன் மூலம் தோட்டத்தில் உள்ள கலைகள் போன்றவற்றை எளிமையாக
கொற்றி எடுக்கலாம். மாடி தோட்டத்திற்க்கு அவளோவாக பயன் பெறாது.
பூவாளி
இதன் மூலம் தண்ணீரை வேர்களுக்கு பாதிப்பு வராமல், இலைகளின் மேல் சுலபமாக தெளிக்கலாம்.இதில் நீரில் கரைய கூடிய உரம் போன்றவற்றை இதில் ஒரு ஸ்பூன் அளவு விட்டு செடிகளின் மேல் தெளிக்கலாம்.
இதில் மூலம் பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து,குறிப்பிட்ட இடத்தில் ஸ்ப்ரே
செய்யலாம்.
பழைய பொருட்கள்
o இந்த மாதரி தெளிப்பான் மூடி மட்டும் கடைகளில் கிடைகிறது, அதை நீங்கள் வாங்கி, குளிர்பான மற்றும் தண்ணீர் பாட்டில்களில் திருகி, பூச்சி மருந்துகளை தண்ணீரில் கலந்து அதை இட்டு ஸ்ப்ரே செய்யலாம். இந்த மூடியின் வடிவம் வெவேறு மாதரி கிடைகிறது..
o இதன் ஆரம்ப விலை 20 மட்டுமே.மாடலுகு பொருத்து விலை மாறுபடும்.
பழைய பொருட்கள்
*முட்டை ஓடு
*காகித முட்டை அட்டை
*பேப்பர் கப்
*தெளிப்பான்
*இளநீர் மட்டை
முட்டை ஓடு
o ஹோட்டல்களில் கிடைக்கும் நிறையக முட்டை ஓடுகள்.அவற்றை உடையாமல் எடுத்து
வந்து மண் கலவையை பாதி அளவு நிரப்ப
வேண்டும்,அழுத்தம் தர கூடாது.
o பின்னர், நீங்கள் விதைக்க விரும்பும் விதையை அதில் இட்டு, பின்னர் மீதி கண்
கலவையை போடவும் நண்பர்களே.
o கொஞ்சம் தண்ணீர் விடவும்
o தினமும் சிறுது நீரும்,வெயில் வரும் இடத்தல் வைக்கவும்
o இதில் அடியில் ஓட்டை போடவேண்டும் என்று அவசியம் இல்லை
o விதைத்த பின்பு, அவற்றை படத்தில் உள்ளவாறு, நிழலில் இருக்கும் சமயத்தில் விதை
முளைக்கும் வரை மட்டமே, பிளாஸ்டிக் கவர்களை கொண்டு மூடி வைக்கவும் நண்பர்களே.
o வதை முளைத்த பின்பு அந்த பிளாஸ்டிக் கவர்களை நிரந்தர மாக எடுத்து
விடலாம்.
o பின்னர் அப்படியே முட்டை ஓட்டுடன் நட்டு விடலாம்.
காகித முட்டை
அட்டை
@ காகித முட்டை அட்டை பழைய பேப்பர் மற்றும் மளிகை கடைகளில் கிடைக்கும்,
நீங்கள் குழி தட்டு தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
@ விதை நடுவதற்கு,குழியின் நடுவில், விரலால் சிறு அழுத்தம் கொடுத்து, அதில்
நீங்கள் தேர்ந்தெடுத்த விதைகளை இதில் நடலாம்.
@ விதைத்த பின்பு, அவற்றை படத்தில் உள்ளவாறு, நிழலில் இருக்கும் சமயத்தில் விதை
முளைக்கும் வரை மட்டமே, பிளாஸ்டிக் கவர்களை கொண்டு மூடி வைக்கவும் நண்பர்களே.
@ வதை முளைத்த பின்பு அந்த பிளாஸ்டிக் கவர்களை நிரந்தர மாக எடுத்து
விடலாம்.
பேப்பர் கப்
^அடியில் ஓட்டை போட்ட பேப்பர் கப்களை ஒரு ட்ரே அல்லது செவ்வக அட்டை
பெட்டி(புடவை அட்டை பெட்டி) போன்று அதில் அடுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் மண் கலவையை இட்டு,விதை நட வேண்டும்.
^அந்த பேப்பர் கப் களில் நீங்க என்ன விதை போடுறிங்க என்று எழுதி வைக்க
வேண்டும்.ஏன் என்றால் புதியதாக விதை போடுறிங்க என்றால், முளைத்து வந்த பின் அது
என்ன செடி என்று உங்களுக்கு தெரியாது.
^விதைத்த பின்பு, அவற்றை படத்தில் உள்ளவாறு, நிழலில் இருக்கும் சமயத்தில் விதை முளைக்கும்
வரை மட்டமே, பிளாஸ்டிக் கவர்களை கொண்டு மூடி வைக்கவும் நண்பர்களே.
^விதை முளைத்த பின்பு அந்த பிளாஸ்டிக் கவர்களை நிரந்தர மாக எடுத்து
விடலாம்.
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்....
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.