அனைவருக்கும் வணக்கம்!!!!
ஆரம்பித்த தேதி : 17-டிசம்பர்-2016 // சனிக்கிழமை // மதியம் 12.40
ஆரம்பித்த தேதி : 17-டிசம்பர்-2016 // சனிக்கிழமை // மதியம் 12.40
இந்த blogspot இணையத்தளம் ஆரம்பித்து வழிகாட்டுதல் தந்த எனது நண்பர்
“மோகன் ராஜ்” அவர்களுக்கு மிக மிக நன்றி..
ஒரு செடி வைத்து பார்,அதில் துளிர் வரும் இலைகள் மற்றும் கிளைகளை பார்த்து
வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
|
உணவே மருந்து; மருந்தே உணவு' என வாழ்ந்த சமூகம் நாம். இயற்கையாய் விளைந்த காய்கறிகளையும் கீரைகளையும் உண்டு வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு இருந்த ஆரோக்கியம், இன்று ஏன் நமக்கு இல்லை? பூச்சிக்கொல்லிகளும் செயற்கை ரசாயனங்களும் நமது உணவை நஞ்சாக்கியதில், எண்ணற்ற நோய்களுக்குப் புகலிடமாகிப் போனது நம் உடல். இந்த அவசர வாழ்வில், ஆரோக்கியமான காய்கறிகளுக்கு எங்கு போவது? காங்கிரீட் காடாகிப்போன நகரங்களில், வீடுகளே தீப்பெட்டி அளவுக்குத்தான் இருக்கின்றன. பிறகு, எங்கே செடிகள் வளர்ப்பது? கவலையே வேண்டாம். நம் வீடுகளிலேயே அவரவர் வசதிக்கு ஏற்றவாறு மூலிகைச் செடிகள், காய்கறித் தோட்டம், அலங்காரச் செடிகள், பூச்செடிகள், பழமரங்கள் என வளர்க்கலாம்
வீட்டுத் தோட்டம் என்கிற கான்செப்ட் இப்போது பிரபலமாகி வருகிறது. எல்லோருக்கும் அதைப் பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது. எல்லோருக்குமே ஆரோக்கியமான வாழ்க்கையின் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது.
மாடித்
தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத்
தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’
திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப்
பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித்
தோட்டம் போடலாமே’ என்ற யோசனை மனதுக்குள் எட்டி
பார்த்திருக்கும். வீட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிய கவலையை ஒதுக்கி
வைத்துவிட்டாலும், ‘எப்படித் தோட்டத்தை அமைப்பது?’ என்ற கேள்வி சற்றே மலைப்பை ஏற்படுத்தலாம்.
ஆனால், நேரடியாகக் களத்தில் இறங்கிவிட
வேண்டியதுதான்.இந்த இணைய தளம்
உங்களுக்கு முழுவதும் உறுதுணையாய் இருக்கும் நண்பர்களே.அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழக அரசின் தோட்டக்கலை
மற்றும் மலைப்பயிர்கள் துறை, நகர்ப்புறத் தோட்டக் கலை
அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ‘நீங்களே
செய்து பாருங்கள்’ என்ற செயல்முறை விளக்கக் கையேடு
விளக்குகிறது. வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு அது தரும் எளிய யோசனைகள்.
இந்த இணைய தளத்தின் நோக்கம் வீட்டிற்கு ஒரு தோட்டம். தோட்டத்திற்கு தேவையான அணைத்து குறிப்புகளும் இதில் இருக்கிறது நண்பர்களே. இதில் இருக்கும் தகவல்கள் பார்த்து, கேட்டு, பரிசோதனை செய்தும், சிறந்தவையை இணையத்தில் இருந்து எடுத்து, முகநூல், whatsapp, போன்றவற்றில் இருந்து எடுத்த மிக எளிமையான, சிறந்த பதிவாகும். இதை படிப்பது மட்டும் இல்லாமல், இன்று முதல் செடி வைக்க வேண்டும் என்று உங்கள் மனதில் உதிக்க வேண்டும்.
இந்த இணைய தளத்தின் நோக்கம் வீட்டிற்கு ஒரு தோட்டம். தோட்டத்திற்கு தேவையான அணைத்து குறிப்புகளும் இதில் இருக்கிறது நண்பர்களே. இதில் இருக்கும் தகவல்கள் பார்த்து, கேட்டு, பரிசோதனை செய்தும், சிறந்தவையை இணையத்தில் இருந்து எடுத்து, முகநூல், whatsapp, போன்றவற்றில் இருந்து எடுத்த மிக எளிமையான, சிறந்த பதிவாகும். இதை படிப்பது மட்டும் இல்லாமல், இன்று முதல் செடி வைக்க வேண்டும் என்று உங்கள் மனதில் உதிக்க வேண்டும்.
தமிழக
அரசின் மானிய விலையில் தோட்டம் பொருட்கள் பற்றிய தகவலுக்கு இந்த லிங்க்
பார்க்கவும் நண்பர்களே.
காலை அல்லது மாலையில் ஒரு அரை மணி நேரம் இதற்காக செலவு செய்தால்
போதும்... மனதுக்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சி இதை விட வேறு என்ன இருக்கிறது?....
மரங்களை வைப்போம்
நல்ல மன நிலையை வைப்போம்
|
உற்சாகமாக ஈடுபடுங்கள்......
சந்தோசமான வீட்டுத் தோட்டத்துக்கு என்
வாழ்த்துக்கள்...
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..
This comment has been removed by the author.
ReplyDeleteGood concept.I am going to follow these concept.
ReplyDeleteok thank you
DeleteThank you
ReplyDeletewelcome sir
Delete