கத்தரிக்காய்

கத்தரிக்காய்
மாடி தோட்டத்தில் வளர்க்க சிறந்த காய்.

கதரிக்கையில் நிறைய வகை உண்டு.நாட்டு கத்தரிக்காய் சிறந்தது.அந்த விதையை வாங்கி விதையுங்கள்.

பட்டம்
ஆடி, மாசி

மண்
மணல் கலந்த செம்மண், கரிசல்மண்; நிலம் ஏற்றது.

ரகம்
நாட்டு ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்கள்.

கத்தரி சாகுபடிக்கு பட்டம் மற்றும் ரகம்
கத்தரிக்காய் சாகுபடி செய்ய நல்ல வடிகால் வசதியும், அங்ககச்சத்தும், நிறைந்த மண்ணில் மாசி மாதத்தில் நடவு செய்யலாம். கார அமிலத்தன்மை 6.5 - 7.5 குல் இருக்கனும்;. கோ-1, கோ-2, மதுரை-1, Pமுஆ-1, பாலூர் டீ-2, முமுஆ-1 மற்றும் வீரி ஒட்டு ரகங்களை தேர்வு செய்து நாற்றங்கால் படுக்கையில் நாற்றுகள் உற்ப்பத்தி செய்து பின் நடவு செய்யலாம்.

நாற்றங்கால்  அமைப்பு
மேட்டுப்பாங்கான நிலத்தில் ஒரு அடி உயரம், மூன்று அடி அகலம், தேவைக்கு ஏற்றவாறு நீளமுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும்.  மண்ணை நன்றாக கிளறி கட்டிகள் இல்லாமலும், களைகள் இல்லாமலும் இருக்க வேண்டும். பாத்திகளில் 200 கிலோ தொழுவுரம் போட வேண்டும். பாத்திகளில் விதைகளை வரிசைக்கு வரிசை 10 செ.மீ. இடைவெளியில் இருக்குமாறு தூவ வேண்டும்.  விதைக்கு மேல் சிறிதளவு மணல் தூவி அதன் மேல் வைக்கோல் இட்டு மூடி நீர் தெளிக்க வேண்டும்.

விதைகள் விலை அதிகமாக இருப்பதால் குழித்தட்டு நாற்றாங்கால் முறையை கையாளலாம். தேவையான குழித்தட்டுகளை வாங்கி மண்புழு உரம் அல்லது  மக்க வைத்த தென்னை நார்கழிவு போட்டு விதையை  முளைக்க வைத்து நடவு செய்யலாம்.

கத்தரி நாற்று அழுகல் நோய்
கத்தரியில் நாற்றில் அழுகல் நோயினை கட்டுப்படுத்த வடிகால் வசதியுடன் மேட்டுப்பாத்தி அமைத்து, நாற்றுக்கள் நெருக்கம் இல்லாமல் வளருமாறு விதைக்க வேண்டும்.

பயிர் இடைவெளி - சாதாரகம்   
வரிசைக்கு வரிசை 3   அடி,
செடிக்கு செடி   2   ½ அடி.

ஒட்டுரகம்
வரிசைக்கு வரிசை   2   ½  அடி,
செடிக்கு செடி 2 அடி.

நாற்று வயது
40 நாள் வயதுடைய நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.குழி தட்டில் நாற்று விட்டு, ஒரு தொட்டிக்கு ஒரு நாற்று என்று நடலாம்.

நீர் நிர்வாகம்
நடவு செய்த மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கரிசல் மண்ணாக இருந்தால் வாரம் ஒருமுறையும் செண்மண்ணாக இருந்தால் 5 நாட்களுக்கு ஒரு முறையும் பிறகு தேவைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நிர்வாகம்
நடவில் இருந்து 20வது நாள் முதல் களையும், 40வது நாள் இரண்டாம் களையும் எடுக்க வேண்டும்.  பிறகு மகசூல் வரும் வரை வயலில் களையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.   

அசுவிணி தாக்குதல்
இலையின் அடிப்பகுதியில் தாக்கி பச்சையத்தை உறிஞ்சி விடும்.  தாக்கப்பட்ட இலையை தொட்டால் பிசின் மாதிரி ஒட்டும்.  பாதிக்கப்பட்ட இலை வெளிறிய நிறத்தில் காணப்படும் செடியில்  எறும்பு இருக்கும் 

உண்ணிப் பூச்சியின் தாக்குதல்
கத்திரி செடியின் இலைகளின் அடிப்பாகத்தில் உண்ணிப் பூச்சிகள் கூட்டமாக சாற்றை உறிஞ்சுவதால் இலையின் மேற்புறத்தில் வெள்ளை நிற புள்ளிகளைக் காணலாம். நாளடைவில் பச்சை நிறம் குறைந்து மஞ்சளாகி இலைகள் உதிரும்.  இதனைக் கட்டுப்படுத்த 5 சத வேப்பங்கொட்டை சாற்றினை தெளிக்கலாம்.

கத்தரி செடியில் தண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை
கத்தரி செடியில் தண்டுப்புழு தாக்குதலினால் இலைகள் வாடி இருக்கும். அந்த கிளையை ஒடித்து பார்த்தால் தண்டுப்புழு இருக்கும். இதனை கட்டுப்படுத்தாவிட்டால் இப்புழுக்கள் காய்ப்புழுவாக மாறி கத்தரிக்காய்களை தாக்கி விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை உண்டாக்கும்;. அதனால் இதை ஆரம்பகட்டத்திலேயே கட்டுப்படுத்துவது அவசியம். அதாவது வாடிய  தண்டுப்பகுதியை அறுத்து தீ வைத்து எரித்து விட வேண்டும். அதன்பிறகு இனக்கவர்ச்சிப் பொறியை ஏக்கருக்கு 5 இடத்தில் வைத்து கட்டுப்படுத்தலாம்.

காய்ப்புழு தாக்குதல்
பூ, பிஞ்சு, காய்களில் புழு துளையிட்டு சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறை-இயற்கை முறை 
டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி அட்டை ஒரு ஏக்கருக்கு 4 சிசி கட்டலாம்.  
  
வெள்ளை ஈ தாக்குதல்
 நுழைந்தால் சிறிய வெள்ளை நிற பூச்சி பறக்கும்.  இவை இலையின் சாற்றை உறிஞ்சி, செடியை வளர்ச்சி குன்றச் செய்யும்.
கட்டுப்படுத்தும்முறை - இயற்கை முறை
மஞ்சள் தகட்டில் கிரீஸ் தடவி ஒரு ஏக்கருக்கு 10 இடத்தில்  செடிக்கு மேல் ஒரு அடி உயரத்தில் வைக்க வேண்டும்   
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை
கோடைகாலத்தில் கத்தரி வயலில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகம் இருக்கும். இந்த வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை ஒட்டுபெரியை வைத்து கட்டுப்படுத்தலாம் அல்லது 1 லிட்டர் தண்ணீர்க்கு 3 மில்லி வேப்பம் எண்ணெ கலந்து அதனுடன் ஒட்டு பசையும் கலந்து; கத்தரி வயலில் தெளித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

கற்றாளை பூச்சி அல்லது மாவுப்பூச்சி தாக்குதல்
                செடியின் வேர், தண்டு, இலையில் பஞ்சு போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை 
தாக்கப்பட்ட இலையை அகற்றி விடவேண்டும்.இது எளிதில் கட்டுப்படுத்த இயலாது காரணம் பஞ்சு போன்ற பகுதியில் மருந்து துகள்கள் உட்புகாது .ஒரு லிட்டர் தண்ணீரிருக்கு மீன் எண்ணெய் 5 மில்லி,என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  
உரம் நிர்வாகம்:
ஜீவமிர்தம்,மீன் அமிலம் பயன் படுத்தலாம்.

கத்தரியில்
கத்தரியில் புழுக்களற்ற காய்கள்,பூச்சிகளிடமிருந்து முழு விடுதலை கிடைக்க வந்தவாசி திரு.சீனீவாசன் அவர்களின் எளிய முறை:
ஏரிக்கருவேல மரம் அல்லது கருவேல மரப் பட்டையினை உரித்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.சுமார் 5 கிலோ பட்டையை 5-10லிட் தண்ணீரீல் ஊற வைக்கலாம். 48 மணி நேரம் ஊற அடர் சிவப்பு நிறம் கொண்ட திரவம் கிடைக்கும்.அதனை 15லிட் அளவுள்ள டிரம்மிற்கு 1 லிட் விதம் கலந்து நன்கு நனையுமாறு 20நாட்கள் வரை நாட்களுடைய இளம் செடிகள் மேல் தெளிக்கலாம்.
அதற்கு மேல் அதன் அளவை 15 லிட் டிரம்மிற்கு 3 லிட் வரை கூட்டலாம். இது போல் 20-25 நாட்களுக்கொரு முறை தெளிக்கலாம். இதனால் காய்புழு, தண்டுப்புழு மறைந்து அதிக பளபளப்பான விளைச்சல் கிடைக்கும்.
அறுவடை தொழில் நுட்பம்
நட்ட  70 நாட்களிலும்,அதன் பிறகு  8 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம்.
5 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்து  பூச்சி தாக்கிய காய்களை பொறுக்கி எடுத்துவிட்டு தரமான காய்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லலாம்.
 
குறிப்பு
கத்தரி பத்து வரிசைக்கு மக்காச்சோளம் ஒரு வரிசை என  நடவு செய்யலாம் .வரப்பு பயிராக ஆமணக்கு சாகுபடி செய்யலாம். இதனால் பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..


1 comment:

  1. நாற்பது சென்டிற்கு எத்தனை கிராம் விதை தேவை.

    ReplyDelete

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.